Friday, August 10, 2018

அறத்துப்பால்

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍ ✍✍✍✍
                  அறத்துப்பால் - 1
                   கடவுள் வாழ்த்து

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

விளக்கம்: எழுத்துக்களெல்லாம் அகரத்தை ( அனாவை) முதலாகக் கொண்டிருக்கின்றன. அது போல, உலகம் முழு முதற் கடவுளை முதல்வனாகக் கொண்டிருக்கின்றது.

In English : As the letter A is the first of all letters  so the eternal God is first in the world

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                 அறத்துப்பால் - 2
                  கடவுள் வாழ்த்து

"கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"

விளக்கம்: தூய அறிவினை உடைய இறைவனின் நல்ல அடிகளைத் தொழாமல் இருப்பரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? (ஒன்றுமேயில்லை)

In English : What Profit have those derived from learning  who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                 அறத்துப்பால் - 3
                 கடவுள் வாழ்த்து

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்"

விளக்கம்: நினைப்பவர் மனமாகிய மலரில் அமரும் இறைவனின் சிறந்த அடிகளை இடைவிடாமல் நினைப்பவர், இந்நிலவுலகில் நெடுநாள் நிலைபெற்று வாழ்வர்.

In English : They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind  shall flourish long above all worlds

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                   அறத்துப்பால் - 4
                    கடவுள் வாழ்த்து

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"

விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.

In English : To those who meditate the feet of Him who is void of desire or aversion  evil shall never come

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                   அறத்துப்பால் - 5
                   கடவுள் வாழ்த்து

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

விளக்கம்: இறைவனின் மெய்யான புகழை விருப்பத்தோடு சொல்லிப் போற்றுபவரிடம், அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேர்வதில்லை.

In English : The two fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                   அறத்துப்பால் - 6
                   கடவுள் வாழ்த்து

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்"

விளக்கம்: ஐம்பொறிகளின் (மெய், வாய், கண், மூக்கு, செவி) வழியாகப் பிறக்கும் ஆசைகளையும் விட்டு இறைவனது பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நெடுநாள் நிலைபெற்று வாழ்வர்.

In English : Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                    அறத்துப்பால் - 7
                    கடவுள் வாழ்த்து

"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது"

விளக்கம்: தனக்கு நிகர் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை நீக்குதல் இயலாது.

In English : Anxiety of mind cannot be removed  except from those who are united to the feet of Him who is incomparable

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                 அறத்துப்பால் - 8
                  கடவுள் வாழ்த்து

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது"

விளக்கம்: அறக்கடலாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு அல்லாமல் மற்றவர்க்குப் பிறவிக் கடலைக் கடத்தல் இயலாது.

In English : None can swim the sea of vice  but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                   அறத்துப்பால் - 9
                    கடவுள் வாழ்த்து

"கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"

விளக்கம்: தயையுள்ள இனிய குணங்களையுடைய இறைவனின் அடிகளை வணங்காத உடல்கள், புலன் உணர்வற்ற பொறிகள் போலப் பயனற்றவையாகும்.

In English : The head that worships not the feet of Him who is possessed of eight attributes  is as useless as a sense without the power of sensation

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                    அறத்துப்பால் - 10
                     கடவுள் வாழ்த்து

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்"

விளக்கம்: இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர், பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். மற்றவர் கடக்க முடியாமல் அதனுள் அழுந்துவர்.

In English : None can swim the great sea of births but those who are united to the feet of God

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                 அறத்துப்பால் - 11
                      வான்சிறப்பு

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று"

விளக்கம்: மழையால் உலகம் வாழ்ந்து வருவதால் அம்மழையானது உலக உயிர்களுக்குச் சாவாமருந்து என்று உணரத்தக்கதாகும்.

In English : By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

               அறத்துப்பால் - 12
                    வான்சிறப்பு

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை"

விளக்கம்: உண்பவர்க்கு ஊட்டம் தரும் உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு (உண்பவர்க்குத்) தானும் ஓர் உணவாக அமைவது மழை.

In English : Rain produces good food  and is itself food

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                அறத்துப்பால் - 13
                     வான்சிறப்பு

"விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி"

விளக்கம்: மழை பெய்யாமல் போனால் பரந்த கடலாற் சூழப்பட்ட அகன்ற உலகத்தில் பசி நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

In English : If the cloud  withholding rain  deceive (our hopes) hunger will long distress the sea girt spacious world

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                அறத்துப்பால் - 14
                    வான்சிறப்பு

"ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்"

விளக்கம்: மழை (என்னும் வருவாய்) வளம் குன்றுமானால் (உழுது பயிரிடும்) உழவர் ஏர் பிடிக்கமாட்டார்.

In English : If the abundance of wealth imparting rain diminish  the labour of the plough must cease

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                    அறத்துப்பால் - 15
                        வான்சிறப்பு

"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை"

விளக்கம்: பெய்யாது நின்று மக்களை கெடுப்பதும், அங்ஙனம் கெட்டவர்க்குத் துணையாகப் பெய்து அவரை வாழ்விப்பதும் மழை.

In English : Rain by its absence ruins men; and by its existence restores them to fortune

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                  அறத்துப்பால் - 16
                       வான்சிறப்பு

"விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது"

விளக்கம்: வானத்திலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி, உலகில்( ஓரறிவுயிராகிய) பசும்புல்லின் தலையைக்கூடப் பார்க்க முடியாது.

In English : If no drop falls from the clouds  not even the green blade of grass will be seen

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                   அறத்துப்பால் - 17
                        வான்சிறப்பு

"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்"

விளக்கம்: மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு,மீண்டும் அதனிடத்தில் பெய்யாது விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குறையும்.

In English : Even the wealth of the wide sea will be diminished  if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain)

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
                   அறத்துப்பால் - 18
                        வான்சிறப்பு
 
"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு"

விளக்கம்: மழை பெய்யாவிட்டால், இவ்வுலகில் வானோர்க்காக நடக்கும் ஆண்டுத்திருவிழாவோடு, அன்றாடப் பூசையும் நடைபெறாது.

In English : If the heaven dry up  neither yearly festivals  nor daily worship will be offered in this world  to the celestials

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
                   அறத்துப்பால் - 19
                       வான்சிறப்பு

"தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்"

விளக்கம்: மழை பெய்யாவிட்டால், இப்பரந்தவுலகில் தானமும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் இல்லையாகும்.

In English : If rain fall not  penance and alms deeds will not dwell within this spacious world

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
                  அறத்துப்பால் - 20
                         வான்சிறப்பு

"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு"

விளக்கம்: பண்பு (நீர்மை) இல்லாவிட்டால் உலகம் நிலையாது என்றால், (எவ்வளவு உயர்ந்தவர்க்கும்) மழை இல்லையானால் அப்பண்புக்கு உரிய ஒழுக்கம் நிலைபெறாது.

In English : If it be said that the duties of life cannot be discharged by any person without water  so without rain there cannot be the flowing of water
✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                  அறத்துப்பால் - 21
                   நீத்தார்பெருமை

"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு"

விளக்கம்: ஒழுக்கத்தில் உறுதியாக நின்று, உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையைச் சிறந்தவற்றுளெல்லாம் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவு.

In English : The end and aim of all treatise is to extol beyond all other excellence  the greatness of those who  while abiding in the rule of conduct peculiar to their state  have abandoned all desire

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
                   அறத்துப்பால் - 22
                     நீத்தார்பெருமை


"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று "

விளக்கம்: முற்றும் துறந்த முனிவரது பெருமையை அளவிட்டு கூறுதல், இவ்வுலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவரை எல்லாம் எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.

In English : To describe the measure of the greatness of those who have forsaken the two fold desires  is like counting the dead

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
                     அறத்துப்பால் - 23
                      நீத்தார்பெருமை

"இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு"

விளக்கம்: பிறப்பு, வீடு,( பேறு) என்ற இரண்டின் துன்ப இன்பங்களை ஆராய்ந்து அறிந்து, (அப் பிறப்பு அறுப்பதற்காக) இப் பிறப்பில் துறவறம் பூண்ட முனிவரது பெருமையே, உலகத்தில் உயர்ந்து விளங்குவது.

In English : The greatness of those who have discovered the properties of both states of being  and renounced the world  shines forth on earth (beyond all others)

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                    அறத்துப்பால் - 24
                      நீத்தார்பெருமை

"உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து"

விளக்கம்: அறிவு என்னும் துறட்டியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன், (எல்லா நிலங்களுள்ளும்) மேலானது எனப்படும் வீட்டு நிலத்திற்கு விதை போன்றவன்.

In English : He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                      அறத்துப்பால் - 25
                        நீத்தார்பெருமை

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி"

விளக்கம்: ஐம் புலன்களையும் அடக்கிய முனிவனது வலிமைக்கு வானவர் தலைவனாகிய இந்திரனெ போதிய சான்று ஆவான்

In English : Indra  the king of the inhabitants of the spacious heaven  is himself  a sufficient proof of the strength of him who has subdued his five sense

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                      அறத்துப்பால் - 26
                       நீத்தார்பெருமை
 
"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்"

விளக்கம்: பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்கலைச் செய்து முடிப்பவர் பெரியோர், அருஞ்செயல்கலைச் செய்யமாட்டாமல் எளிய செயல்களை செய்பவர் சிறியோர்.

In English : The great will do those things which is difficult to be done; but the mean cannot do them

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                        அறத்துப்பால் - 27
                         நீத்தார்பெருமை

"சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு"

விளக்கம்: சுவை, ஒளி, ஊறு (தொடு உணர்வு), ஓசை, நாற்றம் (மணம்), என்ற ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவன் வசப்பட்டதே உலகம்.

In English : The world is within the knowledge of him who knows the properties of taste  sight  touch  hearing and smell

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                       அறத்துப்பால் - 28
                        நீத்தார்பெருமை

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்"

விளக்கம்: பயன் நிறைந்த சொற்களையுடைய துறவியரின் பெருமையை, நிலவுலகத்தில் அவர் ஆணையாகச் சொல்லிய அறநெறி மொழிகளே கண்கூடாகக் காட்டிவிடும்.

In English : The hidden words of the men whose words are full of effect  will shew their greatness to the world

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                     அறத்துப்பால் - 29
                      நீத்தார்பெருமை

"குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது"

விளக்கம்: நல்ல குணங்களாகிய( குணக் குன்றுகளான) மலையின் மேல் ஏறி நின்ற பெரியோரின் கடுஞ்சினம், நொடிப்பொழுதெ நிற்பதாயினும், (அச் சினத்திற்கு ஆளானவரால் அதனைத்) தடுத்தல் முடியாது.

In English : The anger of those who have ascended the mountain of goodness  though it continue but for a moment  cannot be resisted

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                   அறத்துப்பால் - 30
                     நீத்தார்பெருமை

"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்"

விளக்கம்: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான குளிர்ந்த அருள் பூண்டொழுகுவதால்,துறவியரே அந்தணர் (மேன்மையானவர்) எனப்படுவர்.

In English : The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                    அறத்துப்பால் - 31
                 அறன்வலியுறுத்தல்

"சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு"
விளக்கம்: அறம் சிறப்பையும் தரும்; செல்வத்தையும் தரும். ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைக் காட்டிலும் மிக்க ஆக்கம் தருவது எது? ( ஒன்றுமில்லை.)

In English : Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                      அறத்துப்பால் - 32
                   அறன்வலியுறுத்தல்

"அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு"

விளக்கம்: ஒருவனுக்கு அறஞ் செய்வதைக் காட்டிலும் மேம்பட்ட ஆக்கமும் இல்லை. அதனை மறந்து செய்யாது விடுவதைக் காட்டிலும் மேம்பட்ட கேடும் இல்லை.

In English : There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                      அறத்துப்பால் - 33
                   அறன்வலியுறுத்தல்

"ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்"
விளக்கம்: அறச்செயலைத் தத்தமக்கு இயன்றவாறு, அது நடைபெறக் கூடிய வழிகளிலெல்லாம் இடைவிடாது செய்ய வேண்டும்.

In English : As much as possible  in every way  incessantly practise virtue

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                      அறத்துப்பால் - 34
                   அறன்வலியுறுத்தல்

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"

விளக்கம்: ஒருவன் தன் மனத்தில் குற்றமில்லாதவனாக இருக்க வேண்டும்.அதுவே அறம்.மனத்தூய்மையற்ற பிற யாவும்( அறம் ஆகா.) வீண் ஆரவாரத் தன்மையனவே ஆகும்.

In English : Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
                   அறத்துப்பால் - 35
                 அறன்வலியுறுத்தல்

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்"

விளக்கம்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் விலக்கி நடந்ததே அறமாகும்.

In English : That conduct is virtue which is free from these four things  viz  malice  desire  anger and bitter speech

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                    அறத்துப்பால் - 36
                  அறன்வலியுறுத்தல்

"அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை"

விளக்கம்: இளைஞராக உள்ளவர், ’பிற்காலத்தில் செய்வோம்’ என்று கடத்தாமல் இளமை தொட்டு அறம் செய்ய வேண்டும். அந்த அறம் அவர் இறக்கும் போது இறவாத் துணையாகும்.

In English : Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                  அறத்துப்பால் - 37
                அறன்வலியுறுத்தல்

"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை"

விளக்கம்: அறத்தின் (வழி) பயன் இது என்று எடுத்துக் கூற வேண்டிய தில்லை. பல்லக்கைச் சுமப்பவனோடு அதில் ஏறிச் செல்பவனிடைப்பட்ட காட்சியாலேயே அது அறியப்படும்.

In English : The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                     அறத்துப்பால் - 38
                  அறன்வலியுறுத்தல்

"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்"

விளக்கம்: அறம் செய்யாது வீணாகும் நாள் இல்லாதவாறு, ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்து வருவானானால், அச்செயலே அவன் இவ்வுலகில் (மீண்டும்) உடம்போடு கூடிவாழும் நாள் ( பிறப்பு ) வரும் வழியை அலைக்குங் கல்லாகும்.

In English : If one allows no day to pass without some good being done  his conduct will be a stone to block up the passage to other births

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                     அறத்துப்பால் - 39
                   அறன்வலியுறுத்தல்

"அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல"

விளக்கம்: அறவழியால் வரும் இன்பமே உண்மையான இன்பமாகும். வேறு தீய வழியில் வருவன எல்லாம் ( இன்பம் போல் தோன்றினாலும்) இன்பம் இல்லாதன; புகழும் இல்லாதன.

In English : Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure  and it is without praise

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                      அறத்துப்பால் - 40
                   அறன்வலியுறுத்தல்

"செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி"

விளக்கம்:ஒருவன் செய்யத்தக்கது அறமே(நன்மையே), செய்யாது விடத்தக்கது பழியே(தீய செயல்கள்).

In English : That is virtue which each ought to do  and that is vice which each should shun

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                        அறத்துப்பால் - 41
                          இல்வாழ்க்கை

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய
நல்லாற்றின் நின்ற துணை"

விளக்கம்: இல்லறத்தில் வாழ்பவன் என்று சோல்லப்படுபவன், இயற்கையான தொடர்புடைய பெற்றோர், மனைவி, மக்கள் என்ற முத்திறத்தாருக்கும், அவர் செல்லும் நல்வழியில் நிலைபெற்ற துணையாவான்.

In English : He will be called a (true) householder  who is a firm support to the virtuous of the three orders in

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
                   அறத்துப்பால் - 42
                      இல்வாழ்க்கை

"துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை"

விளக்கம்: துறவியர், வறியவர், யாரும் துணையின்றிச் செத்தவர்க்கும் இல்லறத்தில் வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் துணையாவான்.

In English : He will be said to flourish in domestic virtue who aids the forsaken  the poor  and the dead

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                    அறத்துப்பால் - 43
                      இல்வாழ்க்கை

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை"

விளக்கம்: இறந்த மூதாதையர், வழிபடு தெய்வம், விருந்தினர், ஏழை உறவினர், தன் குடும்பம் என்ற ஜந்திடத்தும் செய்ய வேண்டிய அறச் செயல்களைத் தவறாமல் செய்தல் ( இல்லறத்தானுக்குத் ) தலைசிறந்த கடமையாகும்.

In English : The chief (duty of the householder) is to preserve the five fold rule (of conduct) towards the manes  the Gods  his guests  his relations and himself

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                     அறத்துப்பால் - 44
                        இல்வாழ்க்கை

"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்"

விளக்கம்: ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தலுக்கு அஞ்சி, தன் பொருளைப் பகுத்தளித்து உண்ணும் வாழ்க்கையை மேற்கொண்டால், அவனது மரபு வழி(சந்ததி) அற்றுப்போதல் இல்லை.

In English : His descendants shall never fail who  living in the domestic state  fears vice (in the acquisition of property) and shares his food (with others)

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                     அறத்துப்பால் - 45
                       இல்வாழ்க்கை

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"

விளக்கம்: இல்வாழ்க்கை, அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவேயாகும்.

In English : If the married life possess love and virtue  these will be both its duty and reward

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                  அறத்துப்பால் - 46
                     இல்வாழ்க்கை

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்"

விளக்கம்: ஒருவன் இல்லற வாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானானால், அவன் அதற்குப் புறம்பாகிய துறவு நெறியிற் சென்று பெறத்தக்கது எது? (ஒன்றுமில்லை)

In English : What will he who lives virtuously in the domestic state gain by going into the other  (ascetic) state ?

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                அறத்துப்பால் - 47
                    இல்வாழ்க்கை

"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை"

விளக்கம்: முறைப்படி இல்லற வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன், பிற வழிகளில் வாழ முயல்வார் எல்லாருள்ளும் தலைமையானவன் ஆவான்.

In English : Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                 அறத்துப்பால் - 48
                   இல்வாழ்க்கை

"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து"

விளக்கம்: பிறரையும் அற நெறியில் நடக்கச் செய்து, தானும் தன் அறத்தினின்றும் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்பவரை விட மிக்க வலிமை உடையதாகும்.

In English : The householder who  not swerving from virtue  helps the ascetic in his way  endures more than those who endure penance

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

               அறத்துப்பால் - 49
                  இல்வாழ்க்கை

"அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"

விளக்கம்: ( இருவகை அறத்துள்ளும் ) அற என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் பிறரால் பழிக்கப்படாத தூய்மையுடையதானால் மிக நல்லது.

In English : The marriage state is truly called virtue The other state is also good  if others do not reproach it

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

                  அறத்துப்பால் - 50
                      இல்வாழ்க்கை

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்"

விளக்கம்: உலகத்தில் வாழவேண்டிய முறைப்படி இல்லறம் மேற்கொண்டு வாழ்பவன், ( இவ்வுலகத்தானே யானாலும் ), வானுலகில் உள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

In English : He who on earth has lived in the conjugal state as he should live  will be placed among the Gods who dwell in heaven

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 51

வாழ்க்கைத்துணைநலம்

"மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை"


விளக்கம்: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்குண நற்செயல்கள் உடையவளாய், தன்னை மணந்துகொண்ட கணவனின் வருவாய்க்குத் தக்கவாறு செட்டாக வாழ்க்கை நடத்துபவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.

In English : She who has the excellence of home virtues  and can expend within the means of her husband  is a help in the domestic stat

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 52

வாழ்க்கைத்துணைநலம்

"மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்"


விளக்கம்: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்குண நற்செயல்கள் மனைவியின்டம் இல்லையானால்,ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது.

In English : If the wife be devoid of domestic excellence  whatever (other) greatness be possessed  the conjugal state  is nothing

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 53

வாழ்க்கைத்துணைநலம்

"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை?"


விளக்கம்: ஒருவனுடைய மனைவி நற்செயல்களால் சிறப்புடையவளானால், அவனுக்கு இல்லாதது எது? அவள் அச்சிறப்பு இல்லாதவளானால் அவனுக்கு உள்ளது எது?

In English : If his wife be eminent (in virtue)  what does (that man) not possess ? If she be without excellence  what does (he) possess ?

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 54

வாழ்க்கைத்துணைநலம்

"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்"


விளக்கம்: கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருக்குமானால்,(அக்கற்புடைய) பெண்ணை விடப்பெருமையுடையவை வேறு எவை உள்ளன?

In English : What is more excellent than a wife  if she possess the stability of chastity ?

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 55

வாழ்க்கைத்துணைநலம்

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை"


விளக்கம்: காலையில் துயில் எழும்போது, பிறிதொரு தெய்வத்தைத் தொழாமல், கணவனையே தெய்வமாகக் கருதித் தொழுது எழுகின்ற பத்தினி, பெய் என்றால் மழை பெய்யும்

In English : If she  who does not worship God  but who rising worships her husband  say  "let it rain " it will rain

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 56

வாழ்க்கைத்துணைநலம்

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்"


விளக்கம்: கற்பு நெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன்னை மணந்து கொண்டவனையும் கற்புத் தவறாதவாறு பேணி, தகுதியமைந்த புகழையும் காத்து, மனையறங்களிலும் தளர்ச்சி இல்லாதவளெ ( இல்லறத்திற்குச் சிறந்த ) பெண்.

In English : She is a wife who unweariedly guards herself  takes care of her husband  and preserves an unsullied fame

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 57

வாழ்க்கைத்துணைநலம்

"சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை"


விளக்கம்: மகளிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்து வைத்தாற் போல் காக்கும் காவல் என்ன பயன் தரும்? அம்மகளிர், நிறை என்னும் பண்பால், தம்மைத் தாம் காத்துக் கொள்ளும் காவலே சிறந்தது.

In English : What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 58

வாழ்க்கைத்துணைநலம்

"பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு"


விளக்கம்: மகளிர் தம் கணவனைப் பேணிக் கடமையைச் செய்யப்பெற்றால், பெருஞ்சிறப்பினையுடைய தேவருலக வாழ்வைப் பெறுவர்.

In English : If women shew reverence to their husbands  they will obtain great excellence in the world where the gods flourish

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 59

வாழ்க்கைத்துணைநலம்

"புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை"


விளக்கம்: புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, தம்மை இகழ்ந்து பேசும் பகைவர்முன் ஆண் சிங்கம் போல் இறு மாந்து நடக்கும் பெருமித நடையில்லை.

In English : The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step  before those who revile them

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 60

வாழ்க்கைத்துணைநலம்

"மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு"


விளக்கம்: மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பெ இல்லறத்திற்கு மங்கலமாகும். நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலமாகும் என்று அறிந்தோர் கூறுவர்.

In English : The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 61

மக்கட்பேறு

"பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற"


விளக்கம்: பெறக்கூடிய பேறுகளுள் அறிய வேண்டிய கல்வி அறிவுவைகளை அறியும் மக்களைப் (பிள்ளைகளப்) பெறுவதைத் தவிர, வேறு சிறந்த பேறுகளை (நன்மைகளை) யாம் அறிந்ததில்லை.

In English : Among all the benefits that may be acquired  we know no greater benefit than the acquisition of intelligent children

 ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 62

மக்கட்பேறு

"எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்"


விளக்கம்: பழி இல்லாத நற்குணங்களையுடைய மக்களைப் பெற்றால் பெற்றோர்க்கு எப் பிறவியிலும் துன்பங்கள் அணுகமாட்டா.

In English : The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition  free from vice

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 63

மக்கட்பேறு

"தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்"


விளக்கம்: தம் மக்களைத் (பிள்ளைகளை) தம் செல்வமென்று (சொத்து) பாராட்டுவர் பெற்றோர் அம்மக்களின் மகச்செல்வம் அவரவர் வினைக்கு (செய்கின்ற கிரியைக்கு) ஏற்றவாறு வரும்.

In English : Men will call their sons their wealth  because it flows to them through the deeds which they (sons) perform on their behalf

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 63

மக்கட்பேறு

"தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்"


விளக்கம்: தம் மக்களைத் (பிள்ளைகளை) தம் செல்வமென்று (சொத்து) பாராட்டுவர் பெற்றோர் அம்மக்களின் மகச்செல்வம் அவரவர் வினைக்கு (செய்கின்ற கிரியைக்கு) ஏற்றவாறு வரும்.

In English : Men will call their sons their wealth  because it flows to them through the deeds which they (sons) perform on their behalf

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 64

மக்கட்பேறு

"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்"


விளக்கம்: தம் மக்களின் சிறு கைகளால் துழாவிக் குழைக்கப்பட்ட உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமையுடையதாம்.

In English : The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 65

மக்கட்பேறு

"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு"


விளக்கம்: தம் மக்களின் உடம்பைத் தொட்டு அணைத்துக் கொள்ளுதல் உடலுக்கு இன்பம் தரும், அம்மக்களின் மழலைச்சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தரும்.

In English : The touch of children gives pleasure to the body  and the hearing of their words  pleasure to the ear

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 66

மக்கட்பேறு

"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்"


விளக்கம்: தம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டு அறியாதவரெ, குழலிசை இனியது யாழிசை இனியது என்று கூறுவர்.

In English : The pipe is sweet  the lute is sweet  say those who have not heard the prattle of their own children

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 67

மக்கட்பேறு

"மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்"


விளக்கம்: தந்தை தன் மகனுக்குச் செய்யும் நன்மை, கற்றோர் அவையில் எல்லோரினும் மேம்பட்டு விளங்குமாறு அவனைச் சிறந்த கல்விமான் ஆக்குதலாகும்.

In English : The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 68

மக்கட்பேறு

"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது"


விளக்கம்: தம்மைவிட மிகுதியாகத் தம் மக்கள் கல்வியறிவு உடையவராயிருத்தல்,(பெற்றோராகிய தமக்கு மட்டுமின்றி), இப்பேருலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் இன்பம் தருவதாம்.

In English : That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 69

மக்கட்பேறு

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்"


விளக்கம்: தன் மகனை கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய், தான் அவனைப் பெற்றெடுத்த பொழுதைவிடப் பெரிது மகிழ்வாள்.

In English : The mother who hears her son called a wise man will rejoice more than she did at his birth

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 70

மக்கட்பேறு

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்"


விளக்கம்: மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய கைம்மாறு, இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன பாக்கியம் (புண்ணியம், நன்மை) செய்தானோ? என்று வியந்து சொல்லுமாறு நடப்பதாம்.

In English : . (So to act) that it may be said by what great penance did his father beget him  is the benefit which a son should render to his father

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 71

அன்புடமை

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்"


விளக்கம்: அன்புக்கும் ( அதைப் பிறர் அறியாதவாறு) அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உள்ளதோ? ( அன்பரின் துன்பம் கண்டவிடத்தும், நெடுநாள் பிரிந்திருந்த நெருங்கிய உறவினரைக் கண்டவிடத்தும்) அன்புடையார் சிந்தும் கண்ணீரே உள்ளேயிருக்கும் அன்பைப் பலரும் அறியப் பறைசாற்றிவிடும்.

In English : Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 72

அன்புடமை

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு"


விளக்கம்: அன்பில்லாதார் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன் படுத்துவர், அன்புடையவரோ, தம் உடம்பையும் பிறர்க்குப் பயன்படுத்துவர்.

In English : Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 73

அன்புடமை

"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு"


விளக்கம்: பெறுதற்கு அரிய மக்களுயிர்க்கு உடம்போடு சேர்ந்துள்ள தொடர்பைபோ ( உடலோடு கூடிப் பிறந்ததை ), அன்போடு பொருந்தி வாழ்ந்ததன் பயன் என்று அறிவுடையோர் கூறுவர். (அதாவது பெற்றோர் கொண்ட அன்பே மக்கட் பிறப்பிற்குக் காரணம். வழக்கு- வழங்கும்நெறி, வாழ்க்கை நெறி; பயன்.)

In English : They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 74

அன்புடமை

"அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு

என்னும் நாடாச் சிறப்பு"


விளக்கம்: அன்பு, பிறரிடம் விருப்பத்தை உண்டாக்கும். அவ்விருப்பம் எல்லாரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் பெருஞ்சிறுப்பைத் தரும்.

In English : Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 75

அன்புடமை

"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு"


விளக்கம்: உலகத்தில் இன்பம் நுகர்ந்தவர் அடையும் சிறப்பு, அவர் இல்வாழ்க்கையில் அன்பு கொண்டு வாழ்ந்ததன் பயன் என்று அறிவுடையோர் கூறுவர்.

In English : These are the fruits of tranquil life of love

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍


அறத்துப்பால் - 76

அன்புடமை

"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை"


விளக்கம்: அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று சிலர் சொல்வர். அவர் அவர் அறியார். தீமையைக் களையவும் (மறத்திற்கும்) அவ்வன்பே துணையாகும்.(அறம் - நல்வினை. மறம் - தீவினை).

In English : The ignorant say that love is an ally to virtue only  but it is also a help to get out of vice

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 77

அன்புடமை

"என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்"


விளக்கம்: எலும்பில்லாத புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.

In English : Virtue will burn up the soul which is without love  even as the sun burns up the creature which is without bone  ie worms

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 78

அன்புடமை

"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று"


விளக்கம்: உள்ளத்தில் அன்பில்லாத உயிர், இல்லற வாழ்க்கை நடத்துதல், கொடும் பாலை நிலத்தில், வற்றல், (என்ற பெயருடைய) மரம், (பயனற்றுத்) தளிர்த்தாற் போன்றது.

In English : The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 79

அன்புடமை

"புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு"


விளக்கம்: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லதவர்க்கு, புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் தரும்.

In English : Of what avail are all the external members (of the body) to those who are destitute of love  the internal member

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 80

அன்புடமை

"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு"


விளக்கம்: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடம்பாகும். அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு உயிரில்லாமல் எழும்பைத் தோலால் போர்த்த வெறும் உடம்பே ஆகும்.

In English : That body alone which is inspired with love contains a living soul: if void of it  (the body) is bone overlaid with skin

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 81

விருந்தோம்பல்

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு"


விளக்கம்: கணவனும் மனைவியும் வீட்டில் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக் காத்து வாழ்வதெல்லாம், விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் உதவி செய்வதற்கே ஆகும்.

In English : The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 82

விருந்தோம்பல்

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று"


விளக்கம்: உன்ணப்படும் பொருள் சாவாமருந்தே ஆனாலும் விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு, தான் மட்டும் உள்ளிருந்து தனித்து உண்ணுதல் விரும்பத்தக்கதன்று.

In English : It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 83

விருந்தோம்பல்

"வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று"


விளக்கம்: நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேனுகின்றவனது இல்வாழ்க்கை, வறுமையால் துன்பற்றுக் கெடுவதில்லை.

In English : The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 84

விருந்தோம்பல்

"அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்"


விளக்கம்: முக மலர்ச்சியோடு நல்ல விருந்தினரைப் பேணுகின்றவனது வீட்டில், செல்வம் நிலையாகத் தங்கும்.

In English : Lakshmi with joyous mind shall dwell in the house of that man who  with cheerful countenance  entertains the good as guests

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 85

விருந்தோம்பல்

"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்"


விளக்கம்: முதலில் விருந்தினரை உண்ணச் செய்து, பின்பு மிகுந்ததைத் தான் உண்ணும் இயல்புள்ளவன் ( விருந்தோம்பல்தடைபட்ட போது), தன் நிலத்தில் விதைக்க வைத்திருந்த விதை நெல்லினை விதைக்கவும் விரும்புவானோ? (விரும்பமாட்டான் அதையும் விருந்தினருக்கு ஆக்குவான்.)

In English : Is it necessary to sow the field of the man who  having feasted his guests  eats what may remain ?

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 86

விருந்தோம்பல்

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு"


விளக்கம்: ( வீட்டைத் தேடி வந்து இரவாமல் தம்மை நாடி வந்து இடுவாரிடம் ஏற்றுத்) தம் வழிச்செல்லும் தவசிகளைப் பேணி, தன்னிடம் வரும் விருந்தினரை எதிர் நோக்கி இருப்பவன், தெவர்களால் சிறந்த விருந்தினனாக ஏற்றுக்கொள்ளபடுவான்.

In English : He who  having entertained the guests that have come  looks out for others who may yet come  will be a welcome guest to the inhabitants of heaven

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 87

விருந்தோம்பல்

"இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்"


விளக்கம்: விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவிட்டுச் சொல்லத் தக்கதன்று விருந்தினரின் தகுதி அளவே அதன் அளவாம்.

In English : The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 88

விருந்தோம்பல்

"பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்"


விளக்கம்: விருந்தினரைப் பேணி, அவர்க்குச் சிறந்த உணவு படைத்தலாகிய வேள்வியை மேற்கொள்ளாதவர், அவ்வறத்திற்கு பயன்படவெண்டிய பொருளை நிலையானது என்று மயங்கி வருந்திப் பாதுகாத்தும், பின்பு இழந்து விட்டதினால், ஆதரவு அற்றோம்! ` என்று வருந்துவர்.

In English : Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying  we have laboured and laid up wealth and are now without support.

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 89

விருந்தோம்பல்

"உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு"


விளக்கம்: செல்வக் காலத்து வறுமை என்பது விருந்தோம்பலை புறக்கணிக்கும் அறியாமையாகும், அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

In English : That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupid

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍


அறத்துப்பால் - 90

விருந்தோம்பல்

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குநழ்யும் விருந்து"


விளக்கம்: அனிச்சப்பூ மோந்தால் மட்டுமே வாடும், ஆனால் (தன்மானமுள்ள) விருந்தினரோ முகம் (மலராமல்) வேறுபட்டு நோக்கிய அளவிலேயே வாடிவிடுவர்.

In English : As the Anicham flower fades in smelling  so fades the guest when the face is turned away

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 91

இனியவைகூறல்

"இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்"


விளக்கம்: மெய்யுணர்ந்தார் வாய்ச் சொற்கள் இன்சொற்களாம். அவை அன்பு கலந்து வஞ்சனை இல்லாதனவாகும்.

In English : Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 92

இனியவைகூறல்

"அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்"


விளக்கம்: முகம் மலர்ந்து இன்சொல் உடையனவனாக இருக்கப் பெற்றால், அது மனமுவந்து ஒரு பொருளைக் கொடுத்தலைக் காட்டிலும் நல்லதாகும்.

In English : Sweet speech  with a cheerful countenance is better than a gift made with a joyous mind

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 93

இனியவைகூறல்

"முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்"


விளக்கம்: ஒருவரைக் கண்டபொழுதே, முகமல்ர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி, பின்பு அவர் நெருங்கிவந்ததும், அகமலர்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுவதே அறமாம்.

In English : Sweet speech  flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look  is true virtue

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 94

இனியவைகூறல்

"துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு"


விளக்கம்: யாரிடத்திலும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்பவர்க்கு, துன்புறுத்தும் வறுமை என்பதே இல்லையாம்.

In English : Sorrow increasing poverty shall not come upon those who use towards all  pleasure-increasing sweetness of speech

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 95

இனியவைகூறல்

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற"


விளக்கம்: யாரிடத்திலும் பணிவுடையவனாகவும் இன்சொல் கூறுபவனாகவும் இருப்பதெ ஒருவனுக்கு அணியாம், மற்ற அணிகள் அணிகள் அல்ல.

In English : Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 96

இனியவைகூறல்

"அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்"


விளக்கம்: பிறர்க்கு நன்மையானவற்றைப் ஆராய்ந்தறிந்து அவற்றைச் செவிக்கு இனிதாக ஒருவன் சொல்வானானால் அவனுக்குத் தீவினைப் பயன் தேய, நல்வினைப் பயன் பெருகும்.

In English : If a man  while seeking to speak usefully  speaks also sweetly  his sins will diminish and his virtue increase

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 97

இனியவைகூறல்

"நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்"


விளக்கம்: பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பிலிருந்து நீங்காத சொற்கள், சொல்லுவோனுக்கும் இன்பம் தந்து நன்மை விளைவிக்கும்.

In English : That speech which  while imparting benefits ceases not to please  will yield righteousness (for this world) and merit (for the next world)

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 98

இனியவைகூறல்

"சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்"


விளக்கம்: பிறறை வருத்தாத இனிய சொல், ஒருவனுக்கு மறுமையிலும் இம்மையிலும் இன்பம் தரும்.

In English : Sweet speech  free from harm to others  will give pleasure both in this world and in the next

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 99

இனியவைகூறல்

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது"


விளக்கம்: பிறர் கூறும் இன்சொல், தனக்கு இன்பம் தருவதைக் கான்கின்றவன், (தான் மட்டும்) பிறரிடத்தில் வன்சொல்லை வழங்குவது என்ன பயன் கருதியோ?

In English : Why does he use harsh words  who sees the pleasure which sweet speech yields ?

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

அறத்துப்பால் - 100

இனியவைகூறல்

"இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"


விளக்கம்: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றைப் கூறாமல் கடுஞ்சொற்களைக் கூறுவது, கனிகள் இருக்கும் போது காய்களை பறித்துத் தின்பது போன்றது.

In English : To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe
✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍



No comments:

Post a Comment